Monday, January 3, 2011

செங்கோட்டையில் ராஜராஜன்-1000நெல் சாகுபடி தொகுப்பு திடல் ஆய்வு

 
செங்கோட்டை பகுதியில் ராஜராஜன்-1000 நெல் சாகுபடி திடல்களை துணை வேளாண்மை இயக்குனர் அழகிரிசாமி ஆய்வு செய்தார்.செங்கோட்டை வட்டாரத்தில், ஒருங்கிணைந்த தானிய உற்பத்தி திட்டத்தின் கீழ் ராஜராஜன்-1000 நெல் சாகுபடி முறை தொகுப்பு திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்பு திடல்களை துணை வேளாண்மை இயக்குனர் அழகிரிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராஜராஜன் 1000 நெல் சாகுபடி முறையில் சிம்புகள் அதிகம் வெடித்திருப்பதையும், பயிர்கள் வளமாக இருப்பதையும் அவர் ஆய்வு செய்தார். வரும் காலங்களில் ராஜராஜன் 1000 நெல் சாகுபடி முறையை முழுமையாக கடைபிடித்து நெல் சாகுபடியில் உச்ச விளைச்சல் அடைந்திட வேண்டும் எனவும் விவசாயிகளிடம் அழகிரிசாமி கேட்டுக்கொண்டார்.ஏற்பாடுகளை வேளாண் அலுவலர் ஜெயசுதா, உதவி வேளான் அலுவலர்கள் சிக்கந்தர், அமீன், மாரியப்பன், வேளாண் உதவி இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் செய்தனர்.
நன்றி:தினமலர்







No comments:

Post a Comment