செங்கோட்டையில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.செங்கோட்டை வட்டாரத்தில் ஒருங்கிணைந்த தானிய உற்பத்தி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், ஐசோபாம் (எண்ணெய் வித்து), தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம், விதை கிராம திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களினால் பயன் பெறும் விவசாயிகளை முன்பே கண்டறிந்து, விவசாயிகள் விவரங்களை பதிவு செய்து அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.செங்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த அடையாள அட்டை வழங்கும் விழாவில், துணை வேளாண் இயக்குனர் அழகிரிசாமி, விவசாயிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.அப்போது வேளாண்உதவி இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் உடனிருந்தார்.
No comments:
Post a Comment