வாசுதேவநல்லூர் வட்டாரம் தேவிபட்டணம் கிராமத்தில் தோட்டக்கலை துறை மூலம் இடுபொருள் வழங்கும் முகாம் நடந்தது.வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் தோட்டக்கலை துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் நண்ணீர் பசான திட்டம் ஆகிய திட்டங்களில் பயனாளிகளை கிராம வாரியாக தேர்வு செய்து அரசாணை எண் 234, நாள் 1.12.2010 வழங்கிய அறிவுரைப்படி முகாம்கள் அமைத்து இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இடுபொருள் வழங்கும் முகாம் தேவிபட்டணம் கிராமத்தில் பஞ்., தலைவி வேலம்மாள் தலைமையில் நடந்தது. துணை தோட்டக்கலை அலுவலர் மாரியப்பன் வரவேற்றார். வாசுதேவநல்லூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் முகைதீன் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் தோட்டக்கலை திட்டங்கள் பற்றி கூறினார்.
மேலும் இப்பகுதியில் தேவியாறு உபவடிநிலை பகுதி விவசாயிகளுக்கு உரிய திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்து கூறினார்.முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பஞ்., தலைவி வேலம்மாள் இடுபொருட்கள் வழங்கினார். உதவி வேளாண்மை அலுவலர் சுந்தரேஷன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வாசுதேவநல்லூர் உதவி வேளாண்மை அலுவலர்கள் ராஜாமுகம்மது, செல்வமாரி செய்திருந்தனர்.
நன்றி:தினமலர்
No comments:
Post a Comment